/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., போட்டியிட முடிவு
/
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., போட்டியிட முடிவு
ADDED : நவ 04, 2025 04:33 AM
மூணாறு:  தேவிகுளம் தொகுதியில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
பா.ஜ., சிறுபான்மை மோர்ச்சா தேசிய துணைத்தலைவர் நோபிள்மாத்யூ, இடுக்கி வடக்கு மாவட்ட செயலாளர் சானு ஆகியோர் கூறியதாவது:
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், அதில் போட்டியிட பா.ஜ., தயாராக உள்ளது.
தேவிகுளம் தொகுதியில் ஊராட்சி,  ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டுகளில்  பா.ஜ., போட்டியிடும். மலைவாழ் மக் களுக்கு ஒதுக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சியை பா.ஜ., கைப்பற்றும். அங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு, வளர்ச்சி அடைந்த ஊராட்சியாக மாற்றுவது பா.ஜ., வின் நோக்க மாகும்.
மூணாறு சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் ரூ.12 கோடி முறைகேடு நடந்துள்ளது.
அதனால் வாடிக்கையாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக லாப விகிதம் வழங்கப்படவில்லை. தேவிகுளத்தில் கோட்டாட்சியர் அலுவலக நிலம், கேரள அரசு போக்குவரத்து கழக நிலம் ஆகியவை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.
அப்பிரச்னைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவும், சட்டப்படி நட வடிக்கை எடுக்கவும் பா.ஜ., முடிவு செய்துள்ளது என்றனர்.
பா.ஜ., மாநில குழு உறுப்பினர் சுமேஷ், மாவட்ட செயலாளர் அழகர்ராஜ், பொது செயலாளர் கந்தகுமார், மண்டல தலைவர் முருகன், துணைத்தலைவர்கள் ரமேஷ், அர்ஜூனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

