ADDED : பிப் 19, 2026 07:23 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் மத்திய அரசு தமிழக பட்டியலின மக்கள் நலனுக்கு வழங்கிய ரூ.400 கோடி நிதியை திருப்பி அனுப்பிய தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பட்டியலின பிரிவு மாவட்ட தலைவர் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில நிர்வாகி சசிராமன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் மலைச்சாமி, வினோத், தேனி நகரத்தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் ஜெயமுருகன், பெரியசாமி, மணிகண்டன், செல்வேந்திரன், முத்துபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
