
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: திருப்பரங்குன்றம் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து போடியில் பா.ஜ., சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் தண்டபாணி தலைமையில் ரோடு மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர பொதுச் செயலாளர்கள் மணிகண்டன், சிவ குருநாதன், மாவட்ட வர்த்தக அணி பிரிவு செயலாளர் செல்வம், நகர துணைத் தலைவர் லதா, பொருளாளர் செந்தில் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

