UPDATED : அக் 08, 2026 12:43 AM
ADDED : அக் 07, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
தேனி: பிரதமர் நரேந்திர மோடி முதல்வர், பிரதமராக 25 ஆண்டுகள் சேவை புரிந்ததை போற்றும் வகையில் சேவாஜோதி டூவீலர் ஊர்வலம் தேனியில் நடந்தது. ஊர்வலத்தை போடி விலக்கு அருகே பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட தலைவர் விஜய் ஒருங்கிணைத்தார். மாவட்ட நிர்வாகிகள் மலைச்சாமி, வினோத், மோகன்தாஸ், சமூக ஊடக பிரிவு தலைவர் சரணவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் தேனி நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
பா.ஜ.,வினர் தேசியக்கொடியுடன் ஊர்வலம்.
