ADDED : பிப் 20, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்,: சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009 பிப்.19ல் போலீசார்கள் அத்துமீறி நுழைந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் பிப்.19 போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் இதனை கண்டித்து வழக்கறிஞர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் சங்க தலைவர் பாலாஜி செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் முத்தமிழரசு பங்கேற்றனர்.
--

