நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி என்.எஸ்.எஸ்.,திட்டம், பெரிய குளம் மாவட்ட ரத்த வங்கியும் இணைந்து முகாமை நடத்தியது.
கல்லூரி முதல்வர் எச். முகமது மீரான் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.
கல்லூரி மாணவ, மாணவிகள் 110 யூனிட் ரத்தம் தானம் செய்தனர்.
பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாரதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முகமது பஷீர், பைஷ் அகமது, அப்துல்காதர், ரஷிதாபானு , அனிதா, ஜன்னத்துல் பிர்தௌஸ் செய்திருந்தனர்.