ADDED : செப் 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், செப். 8-
பெரியகுளம் அஞ்சுமலை சபரிகிரி வாசன் அறக்கட்டளை- அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் இணைந்து, எட்வர்டு நடுநிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடத்தினர். டாக்டர் அனுமந்தன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் கார்மேகம் குருசாமி, துணைத்தலைவர் ராஜ்குமார், துணைச் செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். 30 தன்னார்வலர்களிடமிருந்து 25 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. இவை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
--
