ADDED : ஆக 19, 2026 01:15 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி குன்னுார் வைகை அணை ரயில்வே ஆற்றுப்பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், குன்னுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி நாகபாண்டி 37. இவர் நேற்று காலை போலீசின் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, குன்னுார் வைகை அணை ரயில்வே ஆற்றுப்பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக கூறினார்.
போலீசார் பாலத்தில் சோதனை நடத்தியபோது மிரட்டல் புரளி என தெரிந்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த நாகபாண்டியை க.விலக்கு போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஜூலை மாதத்திலும் நாகபாண்டி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தபோது போலீசார் அவரது அலைபேசியை பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரத்தில் அவர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிந்தது.
