/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாய் கண்முன்னே ரயில் மோதி சிறுவன் பலி
/
தாய் கண்முன்னே ரயில் மோதி சிறுவன் பலி
ADDED : ஆக 09, 2025 03:54 AM

தேனி: தேனி பங்களாமேடு வடிவேல். இவரது மனைவி அருள்ஆனந்தி. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல் மனைவி, 2 மகன்களை விட்டு சில ஆண்டுகளுக்கு முன் வேறு பெண்ணுடன் திருமணம் முடித்து சென்று விட்டார். அருள்ஆனந்தி ஆண்டிபட்டி ஓட்டலில் வேலை செய்கிறார்.
இரண்டு மகன்களை பள்ளியில் படிக்க வைத்து வந்தார். மகன் கோகுல் 14, உடன் தாய் அருள் ஆனந்தி போடி - மதுரை அகல ரயில் பாதை வழியாக நடந்து சென்றார்.
அப்போது மதுரையில் இருந்து போடி சென்ற மின்சார பகிர்மானத்தை சீரமைக்கும் டவர் வேஹன் ரயில் இன்ஜின் எதிரே குறைந்த வேகத்தில் வந்தது.
அப்போது சிறுவன் கோகுலை தாய் அழைத்த நிலையில் ஓடிய போது ரயில் மோதி பலியானார்.
இறந்த சிறுவனின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.