/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உறவினர் வீட்டில் நுழைந்து பணம், நகை திருட்டு
/
உறவினர் வீட்டில் நுழைந்து பணம், நகை திருட்டு
ADDED : நவ 16, 2025 04:17 AM
பெரியகுளம்: உறவினர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து நகை, பணம் திருடிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை திருமங்கலம் டி.வி., நகரைச் சேர்ந்தவர் காஜாமைதீன் 46. இவருக்கு பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவில் வீடு உள்ளது. லட்சுமி என்பவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் உறவினர்களான கத்தீஸ்பீவி 50, தன்ஷிலா 40, ஹக்கீம் 60, ஆகியோர் காஜாமைதீன் வீட்டில் அத்துமீறி நுழைந்தனர். பீரோவில் வைத்திருந்த ரூ.1.25 லட்சம், மூன்றேகால் பவுன் தங்க நகை, வாஷிங் மிஷின், பிரிட்ஜ், சோபா ஷெட், யூ.பி.எஸ்., சிலிண்டர், கடிகாரம், பீரோ உள்ளிட்டவைகளை திருடிச்சென்றனர். இதனை தடுத்த பணியாளர் லட்சுமியை தள்ளிவிட்டு சென்றனர்.
தென்கரை போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஹக்கீம் புகாரில் குடும்ப பிரச்னை காரணமாக காஜாமைதீன் இவரது உறவினர்கள் ஷபினாபேகம் 26. ஜம்மு 40.
ஆகியோர் தன்னை ஆபாசமாக பேசி, கற்களை எறிந்து வீட்டின் கதவை சேதப்படுத்தினர். காஜாமைதீன் தாக்கியதில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன் என்றார். இவரது புகாரில் போலீசார் காஜாமைதீன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

