/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 29, 2024 05:44 AM

தேனி: தேனி பிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு துறையின் சார்பில், மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவர் கலைச்செல்வி தலைமை வகித்து பேசியதாவது: மாணவிகள் தினமும் உடற்பயற்சி செய்வதையும், யோகா பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல்பருமன் பாதிப்பும் மார்பக புற்றுநோய்க்கான காரணங்களாக உள்ளன.
அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம், நகர் நல நலவாழ்வு மையங்களில் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.' என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெமில்டா ,தேனி நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கவிப்ரியா, நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பொன் பார்த்தீபன், அல்லிநகரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஷாகிதாபானு, நகர் நல நலவாழ்வு மைய டாக்டர் அஸ்வத்தாமன், சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், கார்த்திக் ஆகியோர் பேசினர். சுகாதாரத்துறை நர்ஸ்கள், மக்களை தேடி மருத்துவ களப்பணியாளர்கள் இணைந்து விழிப்புணர்வு நாடகம் நடத்தி, மாணவிகளுக்கு மார்பக புற்று நோய் பரிசோதனை செய்யும் நடைமுறை, சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

