தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' சோதனை

ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' சோதனை

ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' சோதனை


UPDATED : செப் 29, 2026 06:05 PM

ADDED : செப் 29, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 06:05 PM ADDED : செப் 29, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனியில் இருந்து பிற பகுதிகளுக்கு இயங்கும் தனியார் ஆம்னி பஸ் டிரைவர்கள் சிலர் மது குடித்துவிட்டு ஓட்டுவதாக பயணிகள் கூறும் புகாரை தொடர்ந்த 'ப்ரீத் அனலைசர்' சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்

தேனியில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுலபமான முன்பதிவு காரணங்களால் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கின்றனர். வத்தலக்குண்டு-தேவதானப்பட்டி ரோட்டில் கடந்த வாரம் சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், வேன் மீது மோதியதில் 7 பேர் காயம்பட்டனர். டிரைவர் மது போதையில் வாகனம் இயக்கினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் பகலில் மதுகுடித்துவிட்டு மாலையில் பணிக்கு செல்வதாக புகார்கள் கூறுகின்றனர். எனவே ஆம்னி பஸ் டிரைவர்களை போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து டிரைவர் மது அருந்தியுள்ளாரா என்பதை அறியும் 'ப்ரீத் அனலைசர்' சோதனை அடிக்கடி நடத்த வேண்டும் என பயணிகள் கோருகின்றனர். இதுபற்றி போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'ஆம்னி பஸ்கள் டிரைவர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அறிய இரவில் பஸ்கள் புறப்படும் இடங்கள், முக்கிய ரோடுகளில் திடீர் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளோம்,'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us