UPDATED : ஜூன் 13, 2026 05:02 PM
ADDED : ஜூன் 13, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி:ஆண்டிபட்டி தாலுகா சின்னமல்லையாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் முருகன் 46. பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் வடிவேல் வீட்டு கட்டுமானப் பணியின் போது தொண்டை வலிக்குது என தெரிவித்து, தண்ணீர் குடித்து மயங்கி கீழே விழுந்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு முருகன் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர், முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
