ADDED : மே 25, 2026 12:17 AM

மூணாறு: பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
மூணாறு அருகே போதமேடு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் நூற்றுக் கணக்கில் தங்கும் விடுதிகள் உள்ளன.
மூணாறில் இருந்து போதமேட்டிற்க்கு பழைய மூணாறு பகுதியில் உள்ள ஹெட் ஒர்க்ஸ் அணை கட்டு வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி கன ரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் போதமேடு பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் பயன் பெறும் வகையில் போதமேடு ரோடு மற்றும் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அணை கட்டு அருகே முதிரைபுழை ஆற்றின் குறுக்கே ரூ.6.80 கோடி செலவில் பாலம் கட்டும் பணிகள் 2024 டிசம்பரில் துவங்கியது. தற்போது அப்பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
நம்பிக்கை: இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மூணாறில் இருந்து போதமேடு மற்றும் கேரளாவில் பிற பகுதிகளுக்கு செல்லும் சிறிய ரக வாகனங்கள் சொக்கநாடு எஸ்டேட் வழியாக செல்ல அனுமதிக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவும் என அதிகாரிகள் நம்பு கின்றனர்.
