ADDED : ஜூன் 29, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் இந்த சுடுகாடு ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் உள்ளது.
இப்பகுதியில் இரு எரியூட்டும் கொட்டகைகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இவைகள் தற்போது தூர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனை சரி செய்ய பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பேரூராட்சி நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சேதமடைந்த சுடுகாட்டு கொட்டகைகளை அகற்றி புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.