ADDED : பிப் 20, 2026 06:39 AM
மூணாறு: மூணாறில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு கேரளா அரசு பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ. ராஜா நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
மூணாறில், பழைய மூணாறில் உள்ள கேரளா அரசு பஸ் டிப்போவில் இருந்து தொலை தூரத்தில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு 'ஷிப்ட் சூப்பர் பாஸ்ட் பிரீமியம்' பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றை தேவிகுளம் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
திருவனந்தபுரம்: மூணாறில் இருந்து தினமும் அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் வழியாக காலை 10:20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அங்கிருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு மூணாறு வந்து சேரும்.
மூணாறில் இருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:30 மணிக்கு கோழிக்கோடு சென்றடையும். அங்கிருந்து இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4:30 மணிக்கு மூணாறுக்கு வந்து சேரும்.
மூணாறில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விரைவில் தாழ்தள பஸ்கள் இயக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
