தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குப்பை கிடங்குகளாக மாறும் பைபாஸ் ரோடு

 குப்பை கிடங்குகளாக மாறும் பைபாஸ் ரோடு

 குப்பை கிடங்குகளாக மாறும் பைபாஸ் ரோடு


ADDED : ஏப் 25, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்:தேனி மாவட்டத்தில் பைபாஸ் ரோடுகள் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மாவட்டத்தில் இருவழி சாலையாக மாற்றும் போது , தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் ரோடுகள் அமைக்கப்பட்டது , போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை பைபாஸ் ரோடு அமைத்தது. இதனால் நகரங்களில் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

ஆனால் சமீப காலங்களில் பைபாஸ் ரோடுகள் குப்பை கிடங்குகளாக மாறி வருகிறது. குறிப்பாக உத்தமபாளையம் , கம்பம், சின்னமனுார் பைபாஸ் ரோடுகளில் கோழி இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள், குப்பைகள், பயிர் கழிவுகள், ஒட்டல்களில் சேகரமாகும் குப்பை என பல தரப்பட்ட குப்பை பைபாஸ் ரோட்டின் இரண்டு பக்கமும் பக்கவாட்டில் கொட்டப்படுகிறது.

இந்த கழிவுகளை நாய்கள், காக்கைகளும் இழுத்து ரோட்டில் போடுகிறது. தென்னை மொட்டுகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் பைபாஸ் சாலைகளில் செல்லும் வாகன ஒட்டிகளும், வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். பைபாஸ் ரோடுகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன் வர கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us