UPDATED : நவ 26, 2026 05:14 PM
ADDED : நவ 26, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் புதிதாக வீடு கட்டுபவர்களும், ஏற்கனவே உள்ள வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அதனை முறையாக பராமரித்து மழை நீர் வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான அவசியம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நகராட்சி பொறியாளர் கிஷோர்குமார் சிங், மேலாளர் அய்யப்பசாமி, அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
