/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நலவாரிய அட்டையில் போட்டோ கையெழுத்து மாற்ற அழைப்பு
/
நலவாரிய அட்டையில் போட்டோ கையெழுத்து மாற்ற அழைப்பு
நலவாரிய அட்டையில் போட்டோ கையெழுத்து மாற்ற அழைப்பு
நலவாரிய அட்டையில் போட்டோ கையெழுத்து மாற்ற அழைப்பு
ADDED : டிச 19, 2025 05:36 AM
தேனி: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் அலைபேசிகளுக்கு சென்னை தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் இருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்த நலவாரிய அட்டையில் உறுப்பினரின் புகைப்படம், கையெழுத்து அவரவர் இருக்கும் இடத்திலோ, அல்லது இ-சேவை மையத்திலோ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
அவ்வாறு மாற்றம் செய்ய முடியாதவர்கள் தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மாற்றம் செயது கொள்ளலாம் என, உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.