/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்
ADDED : அக் 18, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் பள்ளிகளில் 1432 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம்கள் 8 வட்டாரங்களில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அங்கு நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், இலவச ரயில், பஸ் பாஸ் வழங்குதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.