ADDED : ஏப் 16, 2026 09:29 PM
அ நிறம் | அளவு
போடி:போடி தொகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினர், துணை ராணுவப் படை போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது போடி சாலைக் காளியம்மன் கோயில் அருகே அ.இ.பு.த.ம.மு.க., போடி தொகுதி வேட்பாளர் பத்மநாதனை ஆதரித்து கேரளா, கொல்லம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த வைசாக் அனுமதி இன்றி வாகனத்தில் எல்.இ.டி., ஸ்கிரீன் மூலம் பிரசாரம் செய்து உள்ளார். நவநீதகிருஷ்ணன் புகாரில் வாகனம் பறிமுதல் செய்து, வைசாக் மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
