ADDED : மார் 31, 2026 10:21 PM
தேனி:தேனியில் போடி, பெரியகுளம் தொகுதி தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழா நடந்தது. தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். போடி வேட்பாளர் பன்னீர் செல்வம், பெரியகுளம் வேட்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். காங்.,மாவட்ட தலைவர் கோபிநாத், வி.சி.க., மாவட்ட செயலாளர் சுசிதமிழ் பாண்டியன், நிர்வாகி அன்பு வடிவேல், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மா. கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக விழாவிற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலை வகித்தனர். வேட்பாளர்கள் லோகிராஜன், கதிர்காமு ஆகியோர் நிர்வாகிகளிடம் பேசினர். பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், தேனி நகர தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
