/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது
/
புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது
புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது
புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது
ADDED : டிச 01, 2025 06:18 AM
கடமலைக்குண்டு: கண்டமனுார் அருகே காரில் கடத்திச் சென்ற ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கண்டமனுார் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்டமனுார் வேலப்பர் கோயில் ரோட்டில் கணேசபுரம் அருகே சென்ற காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
காரில் ரூ.42 ஆயிரத்து 288 மதிப்பிலான 55.884 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில் காரில் இருந்தவர்கள் தேனி அல்லிநகரம் அருண் பாண்டியராஜ், மயிலாடும்பாறை பிரேம் என, தெரியவந்தது.
காரை ஓட்டிச்சென்ற அருண் பாண்டியராஜை கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகள், கார், 2 அலைபேசிகளை கைப்பற்றி, தப்பச் சென்ற பிரேமை தேடி வருகின்றனர்.

