/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலக்காய் வரி ஏய்ப்பு: முன்னாள் கவுன்சிலர் உட்பட மூவரிடம் விசாரணை
/
ஏலக்காய் வரி ஏய்ப்பு: முன்னாள் கவுன்சிலர் உட்பட மூவரிடம் விசாரணை
ஏலக்காய் வரி ஏய்ப்பு: முன்னாள் கவுன்சிலர் உட்பட மூவரிடம் விசாரணை
ஏலக்காய் வரி ஏய்ப்பு: முன்னாள் கவுன்சிலர் உட்பட மூவரிடம் விசாரணை
ADDED : டிச 08, 2025 05:25 AM

போடி: தேனி மாவட்டம் போடி நகராட்சித்தலைவர் ராஜராஜேஸ்வரி கணவர் சங்கரின் ஏலக்காய் கோடவுன்களில் நேற்று முன் தினம் முதல் நேற்றிரவு வரை வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரி, ஜி.எஸ்.டி., அமலாக்க துறையினர் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நகராட்சித்தலைவரை தொடர்ந்து கூடலுார் சுலைமான், கேரளா ஜோஜோ, போடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுந்தர்ராஜ் ஆகியோரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தி.முக., கவுன்சிலரான ஏலக்காய் வியாபாரி சங்கர் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். சங்கரின் மகன் யோகேஷூம், அவரது நண்பர் போடி அம்மாபட்டியை சேர்ந்த நபரும் இணைந்து ஏலக்காய் வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் ஏலக்காய் மூடைகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதில் முறைகேடு செய்து பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
அதையடுத்து டிச.4 போடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள சங்கரின் ஏலக்காய் கோடவுனில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனை நடத்தினர்.
நேற்று முன் தினம் வருமானவரித்துறையினர், ஜி.எஸ்.டி., அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் மூவருடன் 50 பேர் கொண்ட குழுவினர் 25க்கும் மேற்பட்ட கார்களில் சங்கரின் வீட்டிற்குச் சென்றனர். வீடு பூட்டி இருந்தது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஏலக்காய் கோடவுன், முந்தல் ரோடு கோடவுன்களின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு நடத்தினர். நகராட்சித் தலைவர், கணவர், மகன் வீட்டில் இல்லை. நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி மட்டும் நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.
அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின் கூடலூர் சுலைமான், கேரள ஜோஜோ, போடி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜிடம் விசாரித்தனர்.
இடுக்கி மாவட்டம் கம்பமெட்டு அருகில் உள்ள சேத்துக்குழியில் டிச-.4ல் வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் தான் போடி நகராட்சி தி.மு.க., தலைவர் கணவர் கோடவுனில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரூ.70 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடத்திருக்கலாம் என்றனர்.

