ADDED : மார் 30, 2026 04:45 PM
அ நிறம் | அளவு
போடி:சட்டசபை தேர்தல் விதி அமலில் உள்ள நிலையில் போடி தொகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ரோட்டில் பட்டாசு வெடித்தனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அ.தி.மு.க., மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம், போடி நகர செயலாளர் மாரியப்பன், வாசு உட்பட 10 பேர் மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
