ADDED : மார் 11, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 12 முதல் 19 வரை நடக்கிறது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர். இதனை கண்டித்து ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி முற்றுகையிட்டனர்.
பின்னர் செயல் அலுவலர் சுபீதாவிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் தேனி மாவட்ட பா.ஜ.,தலைவர் ராஜபாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் மலைச்சாமி, ஆன்மிக பிரிவு தலைவர் ஈஸ்வரன், நிர்வாகிகள் நவநீத கிருஷ்ணன், அன்னப்பராஜ், செல்வம், பெயியசாமி உள்ளிட்டோர் மீது வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
