/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதட்சணை புகாரில் பல் டாக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை புகாரில் பல் டாக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு
வரதட்சணை புகாரில் பல் டாக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு
வரதட்சணை புகாரில் பல் டாக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு
ADDED : நவ 13, 2025 12:19 AM
பெரியகுளம்: மனைவி ரிஜ்வானாபர்வீனிடம் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.20 லட்சம் சீர்வரிசைகளை பெற்றுக்கொண்டு கூடுதலாக சொத்துக்கள் கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் பல் டாக்டர் சாகுல் ஹமீது, மாமியார் அயுஷாபேகம் உட்பட 6 பேர் மீது போலீசார் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் கிழக்கு தெருவைச் சேர்ந்த ரிஜ்வானாபர்வீன் 28,க்கும், மதுரை கருப்பாயூரணி, ஹூசைன் நகரைச் சேர்ந்த பல் டாக்டர் ஷாகுல்ஹமீது 34,க்கும் 2018ல் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது ரிஜ்னாபர்வீனுக்கு சீதனமாக தங்க செயின், நெக்லஸ்,மோதிரம் என 200 பவுன்நகைகளும், (தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.50 கோடி) மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஷாகுல்ஹமீது, இவரது தாயார் ஆயுசாபேகம் 57, உறவினர்கள் ஆஷா 41,ஜியாவுதீன் 44, அனிஷா 39, முகமது யூசுப் 42,ஆகிய 6 பேரும், ரிஜ்வானாபர்வீனிடம், 'உனது பெற்றோரிடம் மேலும் ரூ.50 லட்சம் வாங்கி வர கூறி,' கொடுமை படுத்தினர். ரிஜ்வானாபர்வீன் தந்தை 2020ல் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார்.
ஷாகுல்ஹமீது மருத்துவமனை துவங்க வேண்டும் என கூறி 190 பவுன் நகையை அடகு வைப்பதற்கு ரிஜ்வானா பர்வீனிடம் வாங்கியுள்ளார்.
2020 ஜூன் 15ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அனைத்து நகைகள், பணத்தை வைத்துக் கொண்டு மேலும் தாயாரின் நகைகளையும், தந்தையாரின் சொத்துக்களை எழுதி வாங்கி வரச்சொல்லி கொடுமை படுத்தியுள்ளனர்.
ரிஜ்வானாபர்வீன் கணவர் உட்பட 6 பேர் மீது பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத் தில் வழக்கு கொடுத்தார்.
நீதிமன்றம் உத்தரவில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, பல் டாக்டர் சாகுல் ஹமீது உட்பட 6 பேர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

