/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலி சான்றிதழ் கொடுத்த அரசு ஊழியர் மீது வழக்கு
/
போலி சான்றிதழ் கொடுத்த அரசு ஊழியர் மீது வழக்கு
ADDED : ஆக 17, 2025 02:11 AM
ஆண்டிபட்டி:போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, சத்துணவு அமைப்பாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் புள்ளிமான் கோம்பையை சேர்ந்தவர் சீதாலட்சுமி, 50. இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2011 ஜனவரியில் சத்துணவு அமைப்பாளராக சேர்ந்து பணி செய்தார்.
பதவி உயர்வுக்காக இவர் விண்ணப்பித்திருந்தார். இவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்காக, அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அவை அனுப்பப்பட்டன.
சான்றிதழ்கள் சரிபார்ப்பில் அவரது 10ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரிந்தது. இதை தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி பி.டி.ஓ., முருகேஸ்வரி போலீசில் புகார் செய்தார். சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.