ADDED : மே 06, 2025 06:40 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெரு சுருளிவேல் 45. இப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவின் போது, அதே பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் குடிபோதையில் சுருளிவேல் மீது மோதி உள்ளார்.
இதனை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சுனில், சுருளிவேலுவை தகாத வார்த்தையால் பேசி, கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தினார்.
விலக்கி விட வந்த சுருளிவேலின் மனைவி அன்னக்கிளியை தகாத வார்த்தைகளால் திட்டி, சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். சுருளிவேல் புகாரில் போடி தாலுகா போலீசார் சுனில் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
