/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடகு வைத்த நகையை திருப்பி தராதவர் மீது வழக்கு
/
அடகு வைத்த நகையை திருப்பி தராதவர் மீது வழக்கு
ADDED : அக் 16, 2025 05:01 AM
ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே கல்லுப்பட்டியை சேர்ந்தவர் காந்தி 42, தனது குடும்பத் தேவைக்காக க.விலக்கில் உள்ள சுபாஷ் என்பவரின் நகைக்கடையில் 2022 ஜன., 12ல், 4 பவுன் நகையை அடகு வைத்து ரூ. 1.50 லட்சம் பெற்றுள்ளார். பின் மீண்டும் அதே நகைக்கடையில் ஒரு வாரத்திற்கு பின் 3 பவுன் நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
மொத்தம் 7 பவுன் நகைக்கு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 100 பெற்றுள்ளார். அடகு வைத்திருந்த நகைக்கு வட்டியாக 2023 ஜன.,18ல் ரூ.44,200 செலுத்தி உள்ளார். இதன் பின்பு சுபாஷ் மறுநாள் வந்து அசல் தொகையினை செலுத்தி நகையினை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் நகையினை தராமல் இதுவரை ஏமாற்றி வருவதாக காந்தி தேனி எஸ்.பி.,யிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து க.விலக்கு போலீசார் சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.