/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சி கிணற்றை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
/
பேரூராட்சி கிணற்றை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
ADDED : டிச 18, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பிட் -1 வி.ஏ.ஓ., கற்பகவள்ளிக்கு கெங்குவார்பட்டி பேரூராட்சி ஓடையை ஆக்கிரமிப்பு செய்து கிணற்றில் தனிநபர் பராமரிப்பு மேற்கொள்வதாக புகார் சென்றது. அந்த இடத்தை வி.ஏ.ஓ., சர்வே செய்தார். அந்த கிணறு பேரூராட்சிக்கு உட்பட்டது என தெரிந்தது. கிணற்றை மூடுவதாக தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன். அந்தக் கிணற்றில் பராமரிப்பு பணி செய்தும்,
அனுமதி பெறாமல் கிணற்றுக்கு வெடி வைத்து, பராமரிப்பு பணியை தொடர்ந்துள்ளார். வி.ஏ.ஓ., புகாரில், தேவதானப்பட்டி போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்தார்.

