ADDED : டிச 11, 2025 06:57 AM
பெரியகுளம்: டிச.11-: -: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 41. பெரியகுளம் என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த ராஜாராம் மகள் வினோதினி 39. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள் உள்ளார்.
ரெங்கநாதன் 6 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இன்ஜினியராக பணிபுரிந்து, ஒரு ஆண்டுக்குக்கு முன் மதுரை வந்துள்ளார். வினோதினி பெரியகுளத்தில் பெற்றோருடன் வசித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். ரெங்கநாதன் தன்னுடன் மதுரைக்கு குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். வினோதினி மறுத்துள்ளார்.
பெரியகுளம் வந்த ரெங்கநாதன், வினோதினி ஒருவரிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து தகராறு செய்துள்ளார். ரெங்கநாதனை அவதூறாக பேசிய வினோதினி தாக்கியுள்ளார். வினோதினிக்கு ஆதரவாக 6 பேரும் ரெங்கநாதனை தாக்கியுள்ளனர்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெங்கநாதன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் வினோதினி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

