ADDED : நவ 24, 2024 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டட வளாகத்தில் சி.பி.எஸ்.,(பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்க மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக், மாவட்ட நிதிகாப்பாளர் அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலை, கல்லுாரி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகி பார்த்த சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்கம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மே 2025ல் இருசக்கர வாகன ஊர்வலம், ஜூலையில் சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.