UPDATED : ஆக 03, 2026 07:11 PM
ADDED : ஆக 03, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி பாரதிநகரில் ரூ.
இரண்டரை லட்சம் மதிப்பீட்டில் 18 சிசிடிவி., கண்காணிப்பு கேமராவை பாரதிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தெருக்களில் அமைத்தனர். கேமரா கட்டுப்பாட்டு அறை, விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் திறந்து வைத்தார். பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், பாரதி நகர் குடியிருப்போர் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் முரளி கிருஷ்ணன், பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் கண்ணன் மற்றும் குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.
--
