ADDED : நவ 29, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் 30, சக்கம்பட்டி - முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள சத்யா நகரில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
தனக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிட வேலை செய்து வருகிறார். அந்த இடத்தில் கட்டிடத்திற்கு தேவையான உபகரணங்களையும் வைத்து பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராவும் பொருத்தியுள்ளார். நவம்பர் 26ல் கட்டட வேலையை பார்த்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் காலையில் பார்த்த போது அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 3 சிசிடிவி கேமராக்கள், அதற்கான மானிட்டர் டி.வி., மின் மோட்டாருக்கு பயன்படும் ஸ்டாட்டர் பாக்ஸ் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். சரவணன் புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.