/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக் கல்லூரியில் அலைபேசி திருடியவர்கள் கைது
/
மருத்துவக் கல்லூரியில் அலைபேசி திருடியவர்கள் கைது
ADDED : ஆக 20, 2025 07:26 AM
ஆண்டிபட்டி : பெரியகுளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் 36, உடல் நலம் பாதித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பித்தப்பை ஆப்பரேஷனுக்குப் பின், சிகிச்சையில் இருந்த அவரது மைத்துனருக்கு உதவியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் வார்டு எண் 702 ல் தனது அலைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு தனது மைத்துனர் படுத்திருந்த பெட் அருகே படுத்திருந்தார்.
அப்போது சார்ஜரில் இருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு இருவர் அங்கிருந்து சென்றுள்ளனர். இதைப் பார்த்த பிரவின்குமார் சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த செக்யூரிட்டி கருப்பசாமி இருவரையும் பிடித்தார். பிடிபட்டவர்கள் தேனி அல்லிநகரம் ராஜவெங்கள பாண்டி 27, திருப்புவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் 25, என்பது தெரியவந்தது. பிரவின்குமார் புகாரில் க.விலக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.