UPDATED : ஜூலை 09, 2026 07:53 PM
ADDED : ஜூலை 09, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சியில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் ஜூலை 8 ல் துவங்கி, இன்று ஜூலை 10 வரை நடக்கிறது.
பயிற்றுனர்கள் பரமசிவம், அபிராமி பயிற்சி அளித்து வருகின்றனர். கணக்கெடுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர் தமிஹா சுல்தானா, கூடுதல் பொறுப்பு அலுவலர் சரவணன், பொறியாளர் மோகன் குமார், மேலாளர் முரளிகுமார் தொழில், நுட்ப உதவியாளர் தாரணி, கணக்கெடுப்பு உதவியாளர்கள் சுந்தர்ராஜ், குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
