ADDED : ஜூலை 13, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் முழு விபரங்கள் அடங்கிய தரவு தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது.
இப்பணியை செப்., இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.