ADDED : டிச 27, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இந்திய கம்யூ., நுாற்றாண்டு தொடக்க விழா, முன்னாள் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு 100வது பிறந்தநாள் விழா ஒன்றிய குழு அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் நகர செயலாளர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி வரவேற்றார். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வரன் நூற்றாண்டு விழா நிறைவுறை ஆற்றினார்.