/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
/
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : மார் 04, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கலை குழும கல்வியியல் நிறுவனம், திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்தாண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கலை குழும கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மணிகண்டன் தலைமை வகித்தார். தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் காசிபிரபு முன்னிலை வகித்தார்.
இலவச பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். விழா ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கலை குழும நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மேலாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

