/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
/
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : அக் 23, 2024 05:07 AM
தேனி : மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஷஜீவனா பரிசுகள், சான்றிதழ் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்கள், சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி பண்டிகை விற்பனை கண்காட்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாஸ்கர், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, மகளிர் திட்ட இயக்குனர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

