தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சென்னை-போடி ரயில் பராமரிப்பு பணியால் தாமதம்

சென்னை-போடி ரயில் பராமரிப்பு பணியால் தாமதம்

சென்னை-போடி ரயில் பராமரிப்பு பணியால் தாமதம்


UPDATED : ஜூன் 29, 2026 05:27 PM

ADDED : ஜூன் 29, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 05:27 PM ADDED : ஜூன் 29, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, சேலம், கரூர், மதுரை வழியாக போடிக்கும், மறுமார்க்கத்திலும் சனிக்கிழமைகள் தவிர வாரத்தில் 6 நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் 28 சென்னை சென்ட்ரலில் இரவு 10: 30 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் போடிக்கு ஜூன் 29 காலை 8:50 மணிக்கு வந்து சேரவேண்டிய நிலையில் 2:30 மணி நேரம் தாமதமாக 11:27 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை வரும் நாட்களில் தாமதம் இன்றி இயக்க பயணிகள் வலியுறுத்தினர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரி கூறுகையில், 'அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் போடி ரயில் தாமதமாக புறப்பட்டு வந்தடைந்தது,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us