/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மானியம் பெற கிறிஸ்துவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
மானியம் பெற கிறிஸ்துவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 08, 2025 06:13 AM
தேனி: தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் சென்று வந்த 550 கிறிஸ்துவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரம், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் 2025 நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு 2026 பிப்.28 க்குள் அனுப்பிவைக்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

