ADDED : மே 10, 2025 07:41 AM
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், செம்மொழி நாள் பேச்சு, கட்டுரைப் போட்டி நடந்தது.
இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 60 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதில் வெற்றி பெறுவோர், மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு ஜூன் 3ல் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்பரிசுகள் வழங்க உள்ளார்.
தேனியில் நடந்த போட்டிகளை குள்ளப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல்முருகன் ஒருங்கிணைத்தார். கட்டுரைப் போட்டிகளை கடமலைக்குண்டு அரசு உயர்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், தமிழ் துறை உதவியாளர் புருசோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.
