/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏற்ற, இறக்கத்தில் தேங்காய் விலை விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு
/
ஏற்ற, இறக்கத்தில் தேங்காய் விலை விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு
ஏற்ற, இறக்கத்தில் தேங்காய் விலை விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு
ஏற்ற, இறக்கத்தில் தேங்காய் விலை விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு
ADDED : ஆக 18, 2025 03:22 AM
ஆண்டிபட்டி : கடந்த சில வாரங்களில் தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வருஷநாடு, பெரியகுளம், கம்பம் பகுதியில் தென்னை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் தேங்காய் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு காங்கேயம் மார்க்கெட் கொண்டு சென்று, பின் அங்கிருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த 3 வாரங்களுக்கு முன் கிலோ ரூ.72 ஆக இருந்த தேங்காய் விலை கடந்த வாரம் ரூ.56 ஆக குறைந்தது. திடீர் விலை குறைவால் விவசாயிகள் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேங்காய் இருப்பு வைத்திருந்தவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேங்காய் விலை தற்போது உயர்ந்து மீண்டும் கிலோ ரூ.64 வரை விலை நிர்ணயம் உள்ளது.
தேங்காய் வியாபாரி ஆண்டிபட்டி சரவணன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் 300 டன் தேங்காய்கள் காங்கேயம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தற்போது தேங்காய் விளைச்சலும் குறைந்துள்ளது.
தேங்காய் விலை நிர்ணயம் செய்வதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. விலை நிர்ணயத்தை அரசு கண்காணித்து முடிவு செய்ய வேண்டும். கடந்த சில வாரங்களில் தேங்காய் பயன்பாடும் அதிகம் இல்லை. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வட மாநிலங்களில் தேங்காய் தேவை அதிகரித்துள்ளதால், தற்போது விலை உயர்ந்துள்ளது.
விலையில் ஏற்படும் திடீர் மாற்றம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.