UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:24 PM
போடி: காபி விதைகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து ரசீது பெற்று கொள்ளுமாறு போடி காபி வாரிய இளநிலை தொடர்பு அலுவலர் சக்திவேல் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது, போடி அருகே அகமலை, குரங்கணி, கொட்டகுடி, வடக்குமலை, காரிப்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காபி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. காபி உற்பத்தியை பெருக்க மத்திய அரசின் காபி வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு காபி விதைகள் வழங்கப்படுகிறது. இந்த விதை செடிகள் ஒரே மாதிரியான இனத்தூய்மை, உற்பத்தி, தரம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த ஆண்டு பருவத்திற்கான அரேபிக்கா, ரொபஸ்டா காபி ரக விதை விதைகள் வழங்கப்படுகிறது.
காபி விதை தேவைப்படும் விவசாயிகள் அக்., 30க்குள் கிலோவிற்கு ரூ.500 முன்பணம் செலுத்தி பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
