/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு கூட்டு பிரார்த்தனை
/
மாணவர்களுக்கு கூட்டு பிரார்த்தனை
ADDED : பிப் 09, 2026 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வெழுவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனையில் மையம் ஒருங்கிணைப்பாளர்கிருஷ்ணசைதன்யதாஸ் பேசுகையில்,' மாணவ, மாணவிகள் மனதை ஒருநிலைப்படுத்தி, தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடன் செயல்பட்டால், தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்,' என்றார்.
ஹரே ராம மஹாமந்நிரநாம கூட்டு பிரார்த்தனை நடந்தது. துளசி பூஜை நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மாணவ, மாணவிகளுக்கு அர்ச்சனை செய்த குங்குமம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.--

