ADDED : மார் 19, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத் தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி செயலாளர் மாறன்மணி வரவேற்றார். கல்லுாரி முன்னாள் மாணவியும், கம்பம் இந்தியன் வங்கி உதவி மேலாளருமான அங்கயற்கன்னி கல்லுாரி மலரை வெளியிட்டார்.
கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர் சுசீலாசங்கர், கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
