ADDED : ஜன 13, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான கோலப் போட்டி நடத்தினர்.
தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். பாரம்பரிய கோல வடிவமைப்புகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தேனி அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் சண்முகப்பிரியா மற்றும் மாவட்டத் திறன் அலுவலர் ஜெகராமமகாலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
கல்லூரி செயலாளர் தாமோதரன், முதல்வர் வெற்றிவேல் சிறப்பு பங்கேற்பாளார்களை கவுரவித்தனர்.
வெற்றி பெற்றபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கணினி பயன்பாட்டுத்துறைத் தலைவர் கோகிலாதேவி, உதவிப் பேராசிரியை அன்னலட்சுமி ஒருங்கிணைத்தனர்.

