ADDED : அக் 11, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: சின்னமனூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிப்பவர் ஜெயபாண்டியன் 48, இவரது மகள் வர்ஷினி ப்ரியா 18, கம்பம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் தீபாவளிக்கு புத்தடைகள் எடுக்க செல்வதற்காக கல்லூரிக்கு லீவு போட்டுள்ளார். இவர் அடிக்கடி வரும் தலைவலி மன உளைச்சலில் இருந்துள்ளார் .
பெற்றோர் கோயிலிற்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த வர்ஷினிப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.